/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அணை அருகே போர்வெல் விவகாரம்போராட்டத்தில் கைதான மக்களிடம்அமைச்சர் முத்துசாமி பேச்சுவார்த்தை

ADDED : பிப் 19, 2025 01:59 AM
அணை அருகே போர்வெல் விவகாரம்போராட்டத்தில் கைதான மக்களிடம்அமைச்சர் முத்துசாமி பேச்சுவார்த்தை
டி.என்.பாளையம்:டி.என்.பாளையம், குண்டேரிப்பள்ளம் அணை அருகே, தனியார் ஒருவர் தனது விவசாய நிலத்தில் போர்வெல் அமைத்து, 5 கி.மீ., தொலைவில் உள்ள தனியார் விவசாய நிலத்துக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல, மக்களின் கடும் எதிர்ப்பை மீறி, குழாய் அமைக்கும் பணி சமீபத்தில் நடந்துத.
இந்நிலையில் குண்டேரிப்பள்ளம் அணை அருகே விவசாய நிலத்தில் போடப்பட்டுள்ள போர்வெல், ஊராட்சியின் அனுமதி பெறாமல் போடப்பட்டுள்ளது.
இதை உடனடியாக மூட வேண்டும் என்று கூறி, நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள், டி.என்.பாளையத்தில் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை கைது செய்த போலீசார், டி.என்.பாளையத்தில் ஒரு மண்டபத்தில் அடைத்தனர். விடுவிக்கப்பட்ட நிலையிலும் மண்டபத்தை விட்டு வெளியேற மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த அமைச்சர் முத்துசாமி, நேற்று வந்தார். கலெக்டரிடம் நாளை (இன்று) கலந்து பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கவே, மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.