sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பவானிசாகர் வனப்பகுதியில் தீ தடுப்புகோடு அமைக்கும் பணி தீவிரம்

பவானிசாகர் வனப்பகுதியில் தீ தடுப்புகோடு அமைக்கும் பணி தீவிரம்

பவானிசாகர் வனப்பகுதியில் தீ தடுப்புகோடு அமைக்கும் பணி தீவிரம்


ADDED : பிப் 20, 2025 02:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2025 02:03 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பவானிசாகர் வனப்பகுதியில் தீ தடுப்புகோடு அமைக்கும் பணி தீவிரம்

புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர் வனப்பகுதியில், காட்டு தீ ஏற்படாமல் முன் கூட்டியே தடுக்க, வனத்துறை சார்பில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

பவானிசாகர் மற்றும் விளாமுண்டி வனச்சரகம், புதுபீர்க்கடவு, கொத்தமங்கலம், கற்பூரக்காடு உள்ளிட்ட வனப்பகுதிகளில், ஏராளமான மரங்கள் உள்ளன. சில ஆண்டுகளாக நீடிக்கும் வறட்சி மற்றும் பருவமழை பற்றாக்குறையால் மரம், செடி, கொடிகள் கருகுவது தீப்பற்றுவதற்கு ஏற்றதாக உள்ளது.

நடப்பாண்டு எதிர்பார்த்த அளவு பருவமழை பெய்யாததால், சுட்டெரிக்கும் வெயில், பனியின் தாக்கத்தால் கோடை வெயிலுக்கு முன்னதாகவே, வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து வருகின்றன. இதனால், தீப்பற்றக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது. கோடை காலத்தில் ஏற்படும் காட்டு தீயை தவிர்க்க தீத்தடுப்பு காவலர்கள் நியமனம் செய்யப்படுவர்.

அதன்படி, பவானிசாகர் வனப்பகுதியில் காட்டு தீ ஏற்படாமல் தடுக்க, வனப்பகுதியில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகளை சுத்தம் செய்து பராமரிக்கும் பணி பவானிசாகர், விளாமுண்டி வனச்சரகங்களில் நடந்து வருவதாகவும், இதன் காரணமாக தீ விபத்து ஏற்படும் காலங்களில் தீ நீண்ட தூரம் பரவாமல் தடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us