/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்ககிராம சபை கூட்டத்தில் மனு வழங்கல்

ADDED : மார் 30, 2025 01:11 AM
பவானி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்ககிராம சபை கூட்டத்தில் மனு வழங்கல்
சத்தியமங்கலம்:பவானி ஆற்றில், கழிவு நீர் கலப்பதை தடுக்க செண்பகபுதுார் கிராம சபை கூட்டத்தில், மக்கள் மனு அளித்தனர்.
சத்தியமங்கலம் அடுத்த செண்பகப்புதுார் ஊராட்சியில், உலக தண்ணீர் தினத்தையொட்டி நடந்த கிராம சபை கூட்டத்தில், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் சங்க செயலாளர் நடராஜ் தலைமையில், தொழிலாளர்கள் மனு வழங்கினர்.
அதில் கூறியிருப்பதாவது:மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், தொழிலாளர்களுக்கு நான்கு மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை. மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதி பாக்கியை உடனடியாக விடுவிக்க கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், பவானி நதியில் ஆலை கழிவுகள் ஊராட்சி மற்றும் நகராட்சி கழிவுகள் நேரடியாக கலப்பதால், பவானி நதி நீர் மாசுபட்டு வருகிறது. ஆகவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.