/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விற்பனை கூடத்துக்கு வழிகாட்டி அவசியம்
/
விற்பனை கூடத்துக்கு வழிகாட்டி அவசியம்
ADDED : ஆக 15, 2024 02:28 AM
கோபி, கவுந்தப்பாடியில் இயங்கும் ஒழுங்குமுறை விற்பனை கூடம் குறித்து, வழிகாட்டி பலகை வைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
கவுந்தப்பாடி-சத்தி சாலையில், வடக்கு திசையில் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடம் இயங்குகிறது. சத்தி சாலை விரிவாக்கத்துக்கு பின், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடம் இயங்கும் இடம் அறிவதில், விவசாயிகள் முதல் வியாபாரிகள் வரை குழப்பம் அடைகின்றனர். குறிப்பாக நாட்டு சர்க்கரை ஏலம் குறித்த விபரங்களை அறிய விரும்பும் வெளியூர் வியாபாரிகள், இடம் தெரியாமல் அவதியுறுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகம், பிரதான சாலையில் அதுகுறித்த வழிகாட்டி பலகை வைக்க, அதன் ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விற்பனை கூட அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சாலை விரிவாக்கப்பணி முழுமை பெற்று, அதன்பின் அப்பகுதியில் சாக்கடை கட்டமைப்பு பணி முடிந்தபின், வழிகாட்டி பலகை வைக்கப்படும்' என்றார்.