/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிந்து அறக்கட்டளை சார்பில் நர்சிங் கல்லுாரி தொடக்கம்
/
சிந்து அறக்கட்டளை சார்பில் நர்சிங் கல்லுாரி தொடக்கம்
சிந்து அறக்கட்டளை சார்பில் நர்சிங் கல்லுாரி தொடக்கம்
சிந்து அறக்கட்டளை சார்பில் நர்சிங் கல்லுாரி தொடக்கம்
ADDED : ஆக 25, 2024 01:32 AM
சிந்து அறக்கட்டளை சார்பில்
நர்சிங் கல்லுாரி தொடக்கம்
ஈரோடு, ஆக. ௨௫-
கோபியில் புதிய நர்சிங் கல்லுாரி தொடங்கப்பட உள்ளதாக சாய் சிந்து அறக்கட்டளை தலைவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறக்கட்டளை தலைவரும், தி.மு.க., மாநில நெசவாளரணி செயலாளருமான சிந்து ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சாய் சிந்து அறக்கட்டளை சார்பில், ஈரோடு-பெருந்துறை ரோட்டில் சட்டக் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கோபியில் இந்த கல்வியாண்டு (2024--25) முதல் நான்காண்டு பட்டப்படிப்பான பி.எஸ்.சி., நர்சிங் கல்லுாரி தொடங்கப்பட உள்ளது.
இந்த கல்லூரியில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் ஆய்வகங்கள், அனுபவ பேராசிரியர்கள், 3,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கொண்ட நுாலகம், ஸ்மார்ட் வகுப்பறை, எளிதாக கற்க ஒலி-ஒளி சாதனங்கள், கணினி ஆய்வகம், உள் விளையாட்டரங்கம் மற்றும் அனைத்து வசதிகளுடன் விளையாட்டு மைதானம், இரண்டு பேர் தங்கும் வசதி கொண்ட ஏசி மற்றும் ஏசி இல்லாத அறை, சுகாதாரமான, சத்தான உணவு கொண்ட கேண்டீன் வசதி செய்யப்படும்.
கோபி அபி எஸ்.கே.பல்நோக்கு மருத்துவமனை தலைவர் டாக்டர் செந்தில்நாதன் தலைமையில், டாக்டர் குமரேசன், டாக்டர் நந்திதா குமரேசன், டாக்டர் கார்த்திகேயன், டாக்டர் கவிதா கார்த்திகேயன், டாக்டர் நிர்மலா தனக்கோட்டிராம் குழுவினர் மேற்பார்வையில் மாணவர்களுக்கு சிறந்த களப்பயிற்சி அளிக்க ஆவண செய்யப்பட்டுள்ளது. பி.எஸ்.சி., நர்சிங் படிப்பவர்களுக்கு, படிக்கும் போதே கனடா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில், வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.