/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவித்திறன் குறையுடையோர் உண்ணாவிரதம்
/
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவித்திறன் குறையுடையோர் உண்ணாவிரதம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவித்திறன் குறையுடையோர் உண்ணாவிரதம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவித்திறன் குறையுடையோர் உண்ணாவிரதம்
ADDED : ஆக 29, 2024 07:36 AM
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட செவித்திறன் குறையுடையோர் நலச்சங்கம், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு சார்பில் தலைவர் மோகன்குமார் தலைமையில் உண்ணாவிரதம் இருந்தனர்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளி களுக்கான சைகை மொழி பெயர்ப்பாளரை நியமிக்க வேண்டும். ஈரோடு மாவட்ட கூட்டுறவு வங்கியில், நிபந்தனைகளை தளர்த்தி கடன் வழங்க வேண்டும். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு வழங்க வேண்டும். கணவன், மனைவி ஆகிய இருவரும் மாற்றுத்திறனாளியாக இருந்தால், அவர்களில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுச் செயலாளர் மகேந்திரன், சைகை மொழியில் பேசினார். மொழி பெயர்ப்பாளர் நித்யா, கோரிக்கையை விளக்கி பேசினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகமது குதுரத்துல்லா, தாசில்தார் முத்து கிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். கலெக்டர் நேரில் வந்தால் மட்டுமே பேசுவோம் என, உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர்.
உண்ணாவிரத போராட்டம் நடந்த இடத்துக்கு, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா இரவு, 7:10 மணிக்கு வந்தார்.
அப்போது அவர் பேசுகையில், ''மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் சைகை மொழி பெயர்ப்பாளர் நியமிக்க விதிகள் இல்லை. 2 வீலர், 4 வீலர் லைசென்ஸ் பெற ஆர்.டி.ஓ.,விடம் பேசி முகாம் ஏற்பாடு செய்கிறேன். தகுதியானவர்கள் விண்ணப்பித்தால், விதிமுறைப்படி லைசென்ஸ் வழங்குவர்.வாரிசு நியமனத்துக்கான விதிப்படி, விண்ணப்பித்தால் அரசு பணியிடம் வழங்கும். வங்கி கடனுக்கும் விண்ணப்பித்தால், பரிந்துரைக்கிறோம். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், பயனாளிக்கு உரிய இடம் இருந்து, அங்கு குடிசை அமைத்திருந்தால், தகுதி அடிப்படையில் வழங்கப்படும்,'' என்றார்.இதை தொடர்ந்து, 7:20 மணிக்கு அனைவரும் கலைந்தனர்.

