/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெரும்பள்ளம் ஓடை கரையில் பனை விதைகள் நடும் விழா
/
பெரும்பள்ளம் ஓடை கரையில் பனை விதைகள் நடும் விழா
ADDED : அக் 20, 2024 01:58 AM
பெரும்பள்ளம் ஓடை கரையில்
பனை விதைகள் நடும் விழா
ஈரோடு, அக். 20-
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில், 1 கோடி பனை விதை, ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை காவிரி கரையின் இரு புறங்களிலும் நடும் திட்டம் நடந்து வருகிறது.
இத்திட்டம் ஈரோடு மாவட்டத்தில் கடந்த செப்.,14ல் துவங்கி நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கதிரம்பட்டி பஞ்., பெரும்பள்ளம் ஓடைக்கரையில், 2,000 பனை விதை நடும் விழா நடந்தது. கதிரம்பட்டி முதல் நஞ்சனாபுரம் செல்லும் ஓடைக்கரை வரை பனை விதை நடும் பணியை, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, துவக்கி வைத்தார். தொடர்ந்து 'மீண்டும் மஞ்சப்பை' திட்டத்தின் கீழ், மக்களுக்கு துணியால் ஆன மஞ்சப்பையை வழங்கினார்.
சித்தோடு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், பச்சப்பாளி, சாணார்பாளையத்தில் பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்தார்.