/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அன்னதான சாலையான நெடுஞ்சாலைபக்தர்கள் பசியை போக்கும் பக்தர்கள்
/
அன்னதான சாலையான நெடுஞ்சாலைபக்தர்கள் பசியை போக்கும் பக்தர்கள்
அன்னதான சாலையான நெடுஞ்சாலைபக்தர்கள் பசியை போக்கும் பக்தர்கள்
அன்னதான சாலையான நெடுஞ்சாலைபக்தர்கள் பசியை போக்கும் பக்தர்கள்
ADDED : ஜன 17, 2025 01:49 AM
அன்னதான சாலையான நெடுஞ்சாலைபக்தர்கள் பசியை போக்கும் பக்தர்கள்
காங்கேயம், :தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான முருக பக்தர்கள், முருகப்பெருமானை தரிசிக்க, காங்கேயம் வழியாக பழனிக்கு பாதயாத்திரையாக தற்போது நடந்து செல்கின்றனர். இதில் பலர் அலங்கரிக்கப்பட்ட காவடி, முருகன் சிலைகளுடன், பாடல் பாடியபடி செல்கின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக, காங்கேயம் பகுதி நெடுஞ்சாலையில், முருக பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக நத்தக்காடையூர்-தாராபுரம் வரையில் சாலையில் சாரை சாரையாக செல்லும் பக்தர்களுக்கு உணவளிக்க, சாலையோரங்களில் மூன்று கி.மீ.,க்கு ஒரு அன்னதான கூடம், அந்தந்த பகுதி முருக பக்தர்கள், தன்னார்வலர்களால் நடத்தப்படுகிறது. இதில் தொடர்ந்து காலை, மதியம், இரவு உணவளித்து வருகின்றனர். இதனால் இந்த சாலை அன்னதான சாலையாக காட்சி தருகிறது.