/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தறி பட்டறை அதிபர் நள்ளிரவு விபத்தில் சாவு
/
தறி பட்டறை அதிபர் நள்ளிரவு விபத்தில் சாவு
ADDED : ஜன 18, 2025 01:32 AM
தறி பட்டறை அதிபர் நள்ளிரவு விபத்தில் சாவு
பவானி, : பவானி அருகேயுள்ள வரதநல்லுாரை சேர்ந்தவர் கணேசமூர்த்தி, 38, தறிப்பட்டறை அதிபர். நேற்று முன்தினம் நள்ளிரவில், மருந்து வாங்குவதற்காக மேட்டூர் ரோட்டில் மொபட்டில் சென்றார்.
இவருக்கு பின்னால் சித்தோட்டை சேர்ந்த பாக்யராஜு, 40; அந்தியூர் ரெட்டிபாளையத்தை சேர்ந்த சண்முகம், 39; பைக்கில் சென்றனர். முனியப்பன்கோவில் என்ற இடத்தில், கணேசமூர்த்தி ரோட்டை கடந்தபோது, பின்னால் வந்த பைக், மொபட் மீது மோதியது.
இதில் காயமடைந்த கணேசமூர்த்தி, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று காலை இறந்தார்.
மற்ற இருவரும் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.