/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பைக் மீது பைக் மோதியதில்பவானியில் தொழிலாளி பலி
/
பைக் மீது பைக் மோதியதில்பவானியில் தொழிலாளி பலி
ADDED : ஜன 19, 2025 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பைக் மீது பைக் மோதியதில்பவானியில் தொழிலாளி பலி
பவானி,: பவானி அருகேயுள்ள சன்னியாசிபட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 47; சவுண்ட் சிஸ்டம் தொழிலாளி. அதே பகுதியை சேர்த்த இவரது உறவினர் சந்தோஷ்குமார், 29; இருவரும் ஹீரோ ஹோண்டா பைக்கில் சன்னியாசிபட்டியில் இருந்து மூன்றுரோடுக்கு நேற்று மாலை சென்றனர். ரைஸ் மில் பிரிவு என்ற இடத்தில் மேட்டூர் பைபாஸில் திரும்பியபோது, மேட்டூரில் இருந்து பவானி நோக்கி வந்த பைக் மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட சதீஷ்குமார் சம்பவ இடத்தில் பலியானார். காயமடைந்த சந்தோஷ்குமார் பவானி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.

