/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நாய்களுக்கு பலியாகும் கால்நடைகள்இழப்பீடு கோரி அமைச்சரிடம் மனு
/
நாய்களுக்கு பலியாகும் கால்நடைகள்இழப்பீடு கோரி அமைச்சரிடம் மனு
நாய்களுக்கு பலியாகும் கால்நடைகள்இழப்பீடு கோரி அமைச்சரிடம் மனு
நாய்களுக்கு பலியாகும் கால்நடைகள்இழப்பீடு கோரி அமைச்சரிடம் மனு
ADDED : ஜன 19, 2025 01:44 AM
நாய்களுக்கு பலியாகும் கால்நடைகள்இழப்பீடு கோரி அமைச்சரிடம் மனு
காங்கேயம்,:பி.ஏ.பி., காங்கேயம்-வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாசன சங்க விவசாயிகள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க விவசாயிகள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனை, காங்கேயத்தில் அரசு பயணியர் மாளிகையில் நேற்று சந்தித்தனர். அப்போது அமைச்சரிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் ஆடு, கோழிகளை சமீப காலமாக தெரு நாய்கள் மற்றும் வெறி நாய்கள் தாக்குவது அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும், 1,500க்கும் மேற்பட்ட கால்நடைகள், 5,000க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்துள்ளன. இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் பல மனுக்கள் அளித்தும், போராட்டம் நடத்தியும் தீர்வில்லை. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்
பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று, அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.