sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஆட்டோ மோதி மகன் பலி தாய் உயிருக்கு போராட்டம்

ஆட்டோ மோதி மகன் பலி தாய் உயிருக்கு போராட்டம்

ஆட்டோ மோதி மகன் பலி தாய் உயிருக்கு போராட்டம்


ADDED : ஜன 22, 2025 01:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2025 01:27 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆட்டோ மோதி மகன் பலி தாய் உயிருக்கு போராட்டம்

நம்பியூர்:நம்பியூர் அருகே, டூவீலர்- சரக்கு ஆட்டோ மோதிக்கொண்டதில், மகன் பலியானார். தாய் பலத்த காயமடைந்தார்.

புன்செய்புளியம்பட்டி, காயிதே மில்லத் வீதியை சேர்ந்தவர் லிங்கம்மாள், 50; கணவர் சின்னதுரை இறந்து விட்டார். இவரின் மகன் மர்காஸ் ராஜதுரை, 21; ஒரு மகள் உள்ளார். புளியம்பட்டியில் பழைய இரும்பு கடையில் தொழிலாளியாக ராஜதுரை பணிபுரிந்தார்.

மகள் திருமணத்துக்காக நம்பியூரில் வங்கியில் கடன் பெறுவது சம்பந்தமாக, லிங்கம்மாள் மற்றும் ராஜதுரை, நம்பியூருக்கு டூவீலரில் நேற்று மாலை சென்றனர். பொலவபாளையம் என்ற இடத்தில் எதிரே வந்த சரக்கு ஆட்டோ, டூவீலர் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டது. இதில் சம்பவ இடத்தில் ராஜதுரை பலியானார். உயிருக்கு ஆபத்தான நிலையில், கோவை அரசு மருத்துவமனைக்கு, லிங்கம்மாள் அனுப்பி வைக்கப்பட்டார். ஆட்டோ டிரைவரான வேமாண்டம்பாளையம், கொட்டக்காட்டு பாளையத்தை சேர்ந்த கோபிநாத், 28, மீது வரப் பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us