/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கூடுதல் இ.வி.எம்.,களை தயார் செய்யும் பணி துவக்கம்
/
கூடுதல் இ.வி.எம்.,களை தயார் செய்யும் பணி துவக்கம்
ADDED : ஜன 24, 2025 01:23 AM
கூடுதல் இ.வி.எம்.,களை தயார் செய்யும் பணி துவக்கம்
ஈரோடு கிழக்கு தொகுதியில், 237 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. கூடுதலாக, 20 சதவீத ஓட்டுச்சாவடியை கணக்கிட்டு, அங்கு பயன்படுத்த, 284 இயந்திரங்கள் வீதம் தயார்படுத்தும் பணியை தேர்தல் பிரிவினர் செய்தனர். இதன்படி பெல் இன்ஜினியர்கள் மூலம், தலா, 284 இ.வி.எம்.,கள், கட்டுப்பாட்டு இயந்திரம், வி.வி.பேட் தயார் செய்யப்பட்டுள்ளது.
தற்போது தொகுதியில், 46 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். இ.வி.எம்.,ல் இறுதியாக நோட்டோவும் சேர்க்க வேண்டி உள்ளதால், 47 பொத்தான்களை அழுத்தும் வகையில் இ.வி.எம்.,கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் தலா, 3 இ.வி.எம்.,கள் அமைக்க வேண்டும்.
இதனால் நேற்று காலை ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் ஆணையத்தின் இ.வி.எம்., கிடங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, கூடுதலாக, 568 இ.வி.எம்.,களை தேர்வு செய்து, பெல் இன்ஜினியர்கள் மூலம் முதற்கட்ட பரிசோதனை பணிகளை துவக்கினர். பழுதான இயந்திரம், பேட்டரி கோளாறு போன்றவைகளை அகற்றிவிட்டு, சரியான இயந்திரங்களை தயார் செய்து, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்படும்.

