/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து பாலம்தனியார் மது பாரை மக்கள் முற்றுகை
/
நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து பாலம்தனியார் மது பாரை மக்கள் முற்றுகை
நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து பாலம்தனியார் மது பாரை மக்கள் முற்றுகை
நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து பாலம்தனியார் மது பாரை மக்கள் முற்றுகை
ADDED : ஜன 25, 2025 01:56 AM
நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து பாலம்தனியார் மது பாரை மக்கள் முற்றுகை
புன்செய்புளியம்பட்டி,: புன்செய்புளியம்பட்டியை அடுத்த நல்லுார் பஞ்,. வடக்கு காந்திபுரம், பவானிசாகர் சாலையில், எஃப்.எல்., 2 தனியார் மது பார் அமைக்க பணி நடந்து வருகிறது. இதன் பின்புறம் வடக்கு காந்திபுரத்தில் இருந்து பொன்னம்பாளையம் செல்லும் சாலையை ஒட்டி மழை நீர் ஓடை செல்கிறது. இந்த நீர்வழி பாதையை ஆக்கிரமித்து பாலம் கட்டும் பணியை தொடங்கியுள்ளனர். இதனால் நீர்வழிப் பாதையில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் தனியார் பார் உரிமையாளரை கண்டித்து, பாரை நேற்று முற்றுகையிட்டனர். பணிகளை தடுத்து நிறுத்தி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்.ஐ., ரகுநாதன் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
'மழைநீர் ஓடையில் மண்ணை கொட்டி பாலம் கட்டுவதால், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. பாலம் கட்டக்கூடாது; தடை செய்ய வேண்டும்' என மக்கள் தெரிவித்தனர்.
நீர்வழி பாதையில் கட்டுமான பணி மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தி, கட்டுமான பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என பார் ஊழியர்களிடம் ஆர்.ஐ., அறிவுறுத்தினார். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.