sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஒலகடம் டவுன் பஞ்.,கூட்டத்தில் வாக்குவாதம்தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு

ஒலகடம் டவுன் பஞ்.,கூட்டத்தில் வாக்குவாதம்தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு

ஒலகடம் டவுன் பஞ்.,கூட்டத்தில் வாக்குவாதம்தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு


ADDED : ஜன 30, 2025 01:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2025 01:49 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஒலகடம் டவுன் பஞ்.,கூட்டத்தில் வாக்குவாதம்தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு

பவானி,:பவானி அடுத்த ஒலகடம் டவுன் பஞ்சாயத்தில், 15 வார்டுகள் உள்ளன. தி.மு.க.,வை சேர்ந்த, 10 பேர் கவுன்சிலர்களாகவும், பா.ஜ., - அ.தி.மு.க.,-பா.ம.க.,வில் தலா ஒருவரும் உள்ளனர். தி.மு.க.,வை சேர்ந்த வேலுசாமி தலைவராகவும், அதே கட்சியை சேர்ந்த சிவலிங்கம் துணைத் தலைவராகவும் உள்ளனர்.

இந்நிலையில், ஒலகடம் டவுன் பஞ்சாயத்து கூட்ட அரங்கில் நேற்று சாதாரண கூட்டம் நடந்தது. தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில், 14 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முதல் தீர்மானமாக பிறப்பு, இறப்பு பதிவு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்கப்பட்ட, 13 தீர்மானங்களுக்கு ஒன்பது தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தலைவர் மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, முதல் தீர்மானத்துக்கு ஆதரவும், மீதமுள்ளவைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என, ஒன்பது தி.மு.க., கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு, செயல் அலுவலர் சிவகாமியிடம் கடிதம் கொடுத்தனர். இதுகுறித்து தி.மு.க., கவுன்சிலர்கள் கூறுகையில்,'தி.மு.க.,வை சேர்ந்த தலைவர் வேலுசாமி, எங்கள் வார்டுகளை புறக்கணிக்கிறார். எனவே நாங்கள் ராஜினாமா செய்யலாம் என முடிவு செய்துள்ளோம். மேலும், தலை வரோடு செயல் அலுவல ரும் கூட்டணியாக செயல்படுகிறார்,' என்றனர்.

இதுகுறித்து செயல் அலுவலர் சிவகாமி கூறுகை யில்,''கூட்டம் நடக்கும்போது, மிகவும் தரக்குறையான முறையிலும், கண்ணியமற்ற வகையிலும் கவுன்சிலர்கள் நடந்து கொள்கின்றனர். தீர்மானங்களை எதிர்க்கின்றனர் என்பதற்காக, அவற்றை நிறைவேற்றாமல் இருக்க முடியாது. நாங்கள் எங்கள் கடமையை செய்வோம்,'' என்றார்.

இதுகுறித்து, பஞ்., தலைவர் வேலுசாமி கூறுகையில்,'' மற்றவர்களின் துாண்டுதலின் பேரில், தி.மு.க., கவுன்சிலர்கள் நடந்து கொள்கின்றனர். மக்களுக்கு தேவையானதை தீர்மானங்களாக போடுகிறோம். என் மீது தவறு இருந்தால், ராஜினாமா செய்ய தயார். யாருக்கும் பாரபட்சம் பார்க்கவில்லை,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us