/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வடமாநில நண்பர் வழங்கிய ஹிந்தி நோட்டீஸ்தி.மு.க., வேட்பாளர் விளக்கம்
/
வடமாநில நண்பர் வழங்கிய ஹிந்தி நோட்டீஸ்தி.மு.க., வேட்பாளர் விளக்கம்
வடமாநில நண்பர் வழங்கிய ஹிந்தி நோட்டீஸ்தி.மு.க., வேட்பாளர் விளக்கம்
வடமாநில நண்பர் வழங்கிய ஹிந்தி நோட்டீஸ்தி.மு.க., வேட்பாளர் விளக்கம்
ADDED : ஜன 31, 2025 01:31 AM
வடமாநில நண்பர் வழங்கிய ஹிந்தி நோட்டீஸ்தி.மு.க., வேட்பாளர் விளக்கம்
ஈரோடு:''ஹிந்தியில் பிரசார நோட்டீஸ், வடமாநில நண்பர் அச்சிட்டு வழங்கியது. நாங்கள் அச்சிட்டு வழங்கவில்லை,'' என, ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார் விளக்கம் அளித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து, முற்றிலும் இந்தியில் அச்சிடப்பட்ட நோட்டீஸ், வடமாநிலத்தவர் வசிக்கும் பகுதிகளில் வினியோகித்தனர். இரு மொழி கொள்கை, ஹிந்தி தெரியாது போடா எனக்கூறும் தி.மு.க.,வினர், ஓட்டுக்காக ஹிந்தியில் நோட்டீஸ் வினியோகித்துள்ளதாக, நா.த.க., வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட பலரும் விமர்சித்தனர்.
இதுபற்றி வேட்பாளர் சந்திரகுமார் கூறியதாவது: தி.மு.க., எப்போதும் தமிழ், ஆங்கிலம் என இரு மொழி கொள்கையில் உறுதியாக உள்ளது. இந்தி பேசுவதை, படிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஹிந்தி திணிப்பைத்தான் எதிர்க்கிறோம்.
ஈரோடு உட்பட சில மாவட்டம் ஜவுளி தொழில் சார்ந்தது. இங்குள்ளவர்கள் வடமாநிலம் செல்லும்போதும், அங்குள்ளவர்கள் இங்கு வரும்போதும் ஹிந்தியில்தான் பேசி ஆக வேண்டும். இங்கு சில தலைமுறையாக வாழும் வடமாநிலத்தை சேர்ந்த லக்கி கோத்தாரி என்பவர், ஜவுளி தொழில் செய்கிறார். அவர் தி.மு.க.,வில் பயணிக்கிறார். எங்களுடன் பிரசாரத்துக்கு வந்து, இந்திரா நகர் உட்பட வடமாநிலத்தவர்களிடம் ஓட்டு சேகரித்தபோது, எங்களது தமிழ் நோட்டீஸை, அப்படியே ஹிந்தியில் மொழி பெயர்த்து, அவரே அச்சிட்டு வினியோகித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.