/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு சுதா கேன்சர் சென்டரில் இலவச பரிசோதனை முகாம்
/
ஈரோடு சுதா கேன்சர் சென்டரில் இலவச பரிசோதனை முகாம்
ADDED : பிப் 05, 2025 01:18 AM
ஈரோடு சுதா கேன்சர் சென்டரில் இலவச பரிசோதனை முகாம்
ஈரோடு, : ஈரோட்டில் சுதா கேன்சர் சென்டர் மருத்துவமனையில் புற்றுநோய் இலவச பரிசோதனை முகாம் நடந்தது.
உலக புற்றுநோய் தினத்தையொட்டி, ஈரோடு சுதா கேன்சர் சென்டர் மருத்துவமனை மற்றும் ஐ.எம்.ஏ., ஈரோடு கிளை சார்பில் இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம் நேற்று நடந்தது. சுதா கேன்சர் சென்டரில் நடந்த முகாமுக்கு, மருத்துவமனை சேர்மேன் டாக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். ஐ.எம்.ஏ., செயலாளர் நந்தகுமார் முன்னிலை வகித்தார்.
முகாமில் பங்கேற்ற, 50க்கும் மேற்பட்டோருக்கு, சுதா கேன்சர் சென்டர் மருத்துவமனை தலைமை மருத்துவர் சுகேஷ்வரன் மற்றும் மருத்துவர்கள் மணிகண்டன், பிரதாப் இலவசமாக பரிசோதனை செய்தனர்.
பெண்களுக்கு மார்பக புற்றுநோய், கர்ப்பபை வாய் புற்றுநோய் பரிசோதனை, ஆண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை சுதா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சுதாகர் செய்திருந்தார்.
இதுகுறித்து தலைமை மருத்துவர் சுகேஷ்வரன் கூறியதாவது: சுதா கேன்சர் சென்டர் மருத்துவமனையில் இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம் வரும், 8ம் தேதி வரை நடக்கிறது. ஆண், பெண் இருபாலருக்கும் அனைத்து வித புற்றுநோய்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.