/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கடந்த மூன்று தேர்தலைவிட அதிக ஓட்டுக்கள் பெற்ற தி.மு.க.,
/
கடந்த மூன்று தேர்தலைவிட அதிக ஓட்டுக்கள் பெற்ற தி.மு.க.,
கடந்த மூன்று தேர்தலைவிட அதிக ஓட்டுக்கள் பெற்ற தி.மு.க.,
கடந்த மூன்று தேர்தலைவிட அதிக ஓட்டுக்கள் பெற்ற தி.மு.க.,
ADDED : பிப் 09, 2025 01:25 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த, 3 தேர்தல்களைவிட தற்போது தி.மு.க., கூடுதல் ஓட்டை பெற்றுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில், 2021 சட்டசபை பொது தேர்தலில் காங்., திருமகன் ஈவெரா - 62,495 ஓட்டு, அ.தி.மு.க., யுவராஜா - 56,004 ஓட்டு, நா.த.க., கோமதி - 11,421 ஓட்டு பெற்றனர். நோட்டாவுக்கு, 1,510 ஓட்டு கிடைத்தது. திருமகன் ஈவெரா இறப்பால், 2023ல் நடந்த இடைத்தேர்தலில் காங்., இளங்கோவன் - 1 லட்சத்து, 10,156 ஓட்டு, அ.தி.மு.க., தென்னரசு - 43,923, நா.த.க., மேனகா - 10,827 ஓட்டு பெற்றனர். நோட்டாருக்கு, 796 ஓட்டு விழுந்தது. கடந்த, 2024ல் நடந்த
ஈரோடு லோக்சபா தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க., - பிரகாஷ் - 86,646 ஓட்டு, அ.தி.மு.க., ஆற்றல் அசோக்குமார் - 34,817 ஓட்டு, நா.த.க., கார்மேகம் - 12,784 ஓட்டும் பெற்றனர்.
தற்போது நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., வி.சி.சந்திரகுமார் - 1,15,709 ஓட்டு, நா.த.க., சீதாலட்சுமி - 24,151 ஓட்டு பெற்றனர். நோட்டாவுக்கு, 6,109 ஓட்டு கிடைத்தது.
கடந்த, 4 ஆண்டுகளில் நடந்த நான்கு தேர்தலில், இதில்தான் அதிகபட்சமாக தி.மு.க., - 1,15,709 ஓட்டு பெற்றுள்ளது. நா.த.க., வைவிட கூடுதலாக, 91,558 ஓட்டு கிடைத்துள்ளது.

