/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை முருகன் கோவில்தைப்பூசத் தேர் நிலை சேர்ந்தது
/
சென்னிமலை முருகன் கோவில்தைப்பூசத் தேர் நிலை சேர்ந்தது
சென்னிமலை முருகன் கோவில்தைப்பூசத் தேர் நிலை சேர்ந்தது
சென்னிமலை முருகன் கோவில்தைப்பூசத் தேர் நிலை சேர்ந்தது
ADDED : பிப் 13, 2025 01:43 AM
சென்னிமலை முருகன் கோவில்தைப்பூசத் தேர் நிலை சேர்ந்தது
சென்னிமலை:சென்னிமலை, முருகன் கோவில் தைப்பூச திருத்தேர் நிலை சேர்ந்தது,கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய திருத்தலமான, சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச விழா, 15 நாட்கள் நடக்கும். ஆயிரக்கணக்கானோர் காவடி, பால், தயிர் சுமந்து வந்து பக்தி பரவத்துடன் மேளதாளம் முழுங்க வலம் வந்து, சென்னிமலை மலை மீது படி வழியாக ஏறி சென்று, முருகனை அபி ேஷகம் செய்து வணங்கி செல்வர். இந்தாண்டு சென்னிமலை முருகனை காண கூட்டம் அதிகளவில் கூடியது.
தைப்பூச விழா கடந்த, 3ல் தொடங்கியது. அன்று முதல் பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டம் செவ்வாய்க் கிழமை காலை தொடங்கி, சென்னிமலை நகரில் நான்கு ராஜ வீதிகளையும் திருத்தேர் வலம் வந்து நேற்று மாலை, 6:15 மணிக்கு நிலை சேர்ந்தது.
இன்று இரவு பரிவேட்டை, குதிரை வாகன காட்சி நடக்கிறது. நாளை இரவு தெப்போற்சவம் பூதவாகனம் காட்சி நடக்கிறது. மகாதரிசனமான சனிக்கிழமை அன்று காலை, 10:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத முத்துகுமாரசாமிக்கு, பல்வேறு பொருட்களுடன் மூன்று டன் மலர்களால் சிறப்பு மகா அபிஷேகம் நடக்கிறது. இரவு 7:40 மணிக்கு நடராஜ பெருமானும். சுப்பிரமணியரும் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா காட்சி இரவு முழுவதும் நடக்கிறது. இதை காண லட்சக்கணக்காண பக்தர்கள் கூடுவர். வரும், 16 அதிகாலை 5:00 மணி வரை சுவாமி திருவீதி உலா நடக்கும். அன்று இரவு மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

