/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானிசாகர் வனப்பகுதியில் தீத்தடுப்புகோடு அமைக்கும் பணி தீவிரம்
/
பவானிசாகர் வனப்பகுதியில் தீத்தடுப்புகோடு அமைக்கும் பணி தீவிரம்
பவானிசாகர் வனப்பகுதியில் தீத்தடுப்புகோடு அமைக்கும் பணி தீவிரம்
பவானிசாகர் வனப்பகுதியில் தீத்தடுப்புகோடு அமைக்கும் பணி தீவிரம்
ADDED : பிப் 20, 2025 01:53 AM
பவானிசாகர் வனப்பகுதியில் தீத்தடுப்புகோடு அமைக்கும் பணி தீவிரம்
புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர் வனப்பகுதியில், காட்டு தீ ஏற்படாமல் முன் கூட்டியே தடுக்க, வனத்துறை சார்பில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
பவானிசாகர் மற்றும் விளாமுண்டி வனச்சரகம், புதுபீர்க்கடவு, கொத்தமங்கலம், கற்பூரக்காடு உள்ளிட்ட வனப்பகுதிகளில், ஏராளமான மரங்கள் உள்ளன. சில ஆண்டுகளாக நீடிக்கும் வறட்சி மற்றும் பருவமழை பற்றாக்குறையால் மரம், செடி, கொடிகள் கருகுவது தீப்பற்றுவதற்கு ஏற்றதாக உள்ளது.
நடப்பாண்டு எதிர்பார்த்த அளவு பருவமழை பெய்யாததால், சுட்டெரிக்கும் வெயில், பனியின் தாக்கத்தால் கோடை வெயிலுக்கு முன்னதாகவே, வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து வருகின்றன. இதனால், தீப்பற்றக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது. கோடை காலத்தில் ஏற்படும் காட்டு தீயை தவிர்க்க தீத்தடுப்பு காவலர்கள் நியமனம் செய்யப்படுவர்.
அதன்படி, பவானிசாகர் வனப்பகுதியில் காட்டு தீ ஏற்படாமல் தடுக்க, வனப்பகுதியில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகளை சுத்தம் செய்து பராமரிக்கும் பணி பவானிசாகர், விளாமுண்டி வனச்சரகங்களில் நடந்து வருவதாகவும், இதன் காரணமாக தீ விபத்து ஏற்படும் காலங்களில் தீ நீண்ட தூரம் பரவாமல் தடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.