/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாற்று திறனாளி வீட்டில் எலியால் தீ விபத்து
/
மாற்று திறனாளி வீட்டில் எலியால் தீ விபத்து
ADDED : பிப் 26, 2025 01:06 AM
மாற்று திறனாளி வீட்டில் எலியால் தீ விபத்து
ஈரோடு:ஈரோடு, ஆர்.என்.புதுார், வீரபண்ணாடியூரை சேர்ந்தவர் ரவி. மாற்று திறனாளியான இவர், ஒரு மில்லில் இரவு காவலராக உள்ளார். இவர் மனைவி சித்ரா. நேற்று காலை விளக்கேற்றி சாமி கும்பிட்டு விட்டு வேலைக்கு சென்று விட்டார். ரவி வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். காலை, 10:௩௦ மணியளவில் வீட்டில் இருந்து கரும்புகை வந்தது. அக்கம்பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்து, வீட்டுக்குள் சென்று ரவியை வெளியே அழைத்து வந்தனர். ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள், 10 நிமிடங்களில் தீயை முற்றிலுமாக அணைத்தனர். தீ விபத்தில் வீட்டில் இருந்த துணிகள் எரிந்து சாம்பலானது. சாமி படத்து முன் ஏற்றிய விளக்கை, எலி தள்ளி விட்டதால், தீப்பிடித்தது தெரிய வந்தது.