/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடிவேரி தடுப்பணையில் குப்பை சேகரிக்க உரிய வசதியின்றி அவதி
/
கொடிவேரி தடுப்பணையில் குப்பை சேகரிக்க உரிய வசதியின்றி அவதி
கொடிவேரி தடுப்பணையில் குப்பை சேகரிக்க உரிய வசதியின்றி அவதி
கொடிவேரி தடுப்பணையில் குப்பை சேகரிக்க உரிய வசதியின்றி அவதி
ADDED : மார் 02, 2025 01:37 AM
கொடிவேரி தடுப்பணையில் குப்பை சேகரிக்க உரிய வசதியின்றி அவதி
கோபி:கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணைக்கு, தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வார விடுமுறை மற்றும் பொது விடுமுறை தினங்களில் குவிகின்றனர்.
தின்பண்டங்களுக்கான காகிதங்கள், பாக்குமட்டை தட்டு, சாக்லெட் காகிதங்கள் மற்றும் குழந்தைகளின் டயாபர் வரை கண்ட இடங்களில் தாறுமாறாக வீசி செல்கின்றனர். அதை சேகரித்து அப்புறப்படுத்த துப்புரவு பணியாளர்கள் உள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் குப்பை சேர்ந்ததும், அதை எடுத்து செல்ல வசதியாக, சிறியளவில் குப்பை வண்டி இல்லை. இதனால் குப்பையை கிடைத்த சாக்கில் போட்டு, இழுத்து செல்கின்றனர். நீர்வள ஆதாரத்துறையினர் குப்பை வண்டிக்கு ஏற்பாடு செய்தால், இழுத்து செல்லும் அவல நிலை முடிவுக்கு வரும்.