/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூர் அருகே கோவில் விழாவில்ஆயிரம் கிடா வெட்டி அன்னதானம்
/
அந்தியூர் அருகே கோவில் விழாவில்ஆயிரம் கிடா வெட்டி அன்னதானம்
அந்தியூர் அருகே கோவில் விழாவில்ஆயிரம் கிடா வெட்டி அன்னதானம்
அந்தியூர் அருகே கோவில் விழாவில்ஆயிரம் கிடா வெட்டி அன்னதானம்
ADDED : மார் 02, 2025 01:42 AM
அந்தியூர் அருகே கோவில் விழாவில்ஆயிரம் கிடா வெட்டி அன்னதானம்
அந்தியூர்:அந்தியூர் அருகே உள்ள சந்தியபாளையத்தில், பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா, அம்மன் உத்தரவு கிடைத்தால் மட்டுமே நடக்கும். அந்த வகையில், 2023ல் விழா நடந்தது. கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் காரணமாக விழா நடக்கவில்லை.
நடப்பாண்டுக்கான விழா நடத்த அம்மனிடம் பூ போட்டு உத்தரவு கேட்கப்பட்டது. இதில் உத்தரவு கிடைக்கவே, 15 நாட்களுக்கு முன் பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் மற்றும் வேட்டை (வேண்டுதல் கிடா வழங்கும் நிகழ்ச்சி) நேற்று நடந்தது. அங்காளம்மம், நடராஜர் மற்றும் பச்சாயி அம்மன் உற்சவர் சிலைகளை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து, பக்தர்கள் தோளில் சுமந்து, மடப்பள்ளியில் இருந்து ஊர்வலமாக மயானத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிறப்பு பூஜை மேற்கொள்ளப்பட்டு, பக்தர்கள் வழங்கிய கிடாக்கள், அம்மனுக்கு பலி கொடுக்கப்பட்டது. இந்த வகையில் ஆயிரம் கிடாக்கள் பலி கொடுக்கப்பட்டன. இவற்றை கோவில் வளாகத்திலேயே சமைத்து, பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. ஒருபுறம், 5,000 கிலோ ஆட்டுக்கறியும், மறுபுறமும் சாதமும் மலை போல் குவிக்கப்பட்டு அன்னதானம் நடந்தது. விழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், மற்றும் மக்கள் தரிசனம் செய்ததோடு, அசைவ அன்னதானத்தையும்
உண்டுகளித்தனர்.