/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கூட்டுறவு சங்க சிறப்பு கடன்தீர்வு திட்டத்தை நீட்டிக்கணும்
/
கூட்டுறவு சங்க சிறப்பு கடன்தீர்வு திட்டத்தை நீட்டிக்கணும்
கூட்டுறவு சங்க சிறப்பு கடன்தீர்வு திட்டத்தை நீட்டிக்கணும்
கூட்டுறவு சங்க சிறப்பு கடன்தீர்வு திட்டத்தை நீட்டிக்கணும்
ADDED : மார் 08, 2025 02:45 AM
கூட்டுறவு சங்க சிறப்பு கடன்தீர்வு திட்டத்தை நீட்டிக்கணும்
ஈரோடு:தமிழ்நாடு சிறு குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பனுக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:
கூட்டுறவு சங்கங்களின் மத்திய கால கடன் பெற்ற உறுப்பினர்களுக்கு, சிறப்பு கடன் தீர்வு திட்டத்தை, தமிழக அரசு அறிவித்தது சிறப்பானதாக அமைந்தது. இத்திட்டம் வரும், 12 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது, 50 சதவீத விவசாயிகள், கைவினைஞர்கள் திட்டத்தில் பயன் பெற்றுள்ளனர்.
திட்டத்தை மேலும் ஆறு மாதம் நீட்டித்தால் விவசாயிகளும், மக்களும் பயன்பெறுவர். தவணை தவறிய அனைத்து கடன்தாரர்களையும் திட்டத்துக்குள் கொண்டு வந்து, 25 சதவீத தொகை செலுத்தி, 75 சதவீத தொகையை ஆறு மாதத்துக்குள் செலுத்த அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.