/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொங்கு கலை கல்லுாரி மாணவர்கள் ஸ்டார்ட் அப் போட்டியில் அபாரம்
/
கொங்கு கலை கல்லுாரி மாணவர்கள் ஸ்டார்ட் அப் போட்டியில் அபாரம்
கொங்கு கலை கல்லுாரி மாணவர்கள் ஸ்டார்ட் அப் போட்டியில் அபாரம்
கொங்கு கலை கல்லுாரி மாணவர்கள் ஸ்டார்ட் அப் போட்டியில் அபாரம்
ADDED : ஏப் 12, 2025 01:29 AM
கொங்கு கலை கல்லுாரி மாணவர்கள் ஸ்டார்ட் அப் போட்டியில் அபாரம்
ஈரோடு, ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின், இரண்டாமாண்டு உயிர் தொழில்நுட்பவியல் மாணவர்கள் ஹரி பிரசாத், கவுதம் ஆகியோர், தங்களின் புதுமையான சுற்றுச்சூழலுக்கு உகந்த ஸ்டார்ட் அப் யோசனைக்காக, 25,000 ரூபாய் ரொக்க விருதை பெற்றுள்ளனர். காலநிலை மாற்றம் சார்ந்த விவசாயம், கழிவு மேலாண்மை, நீர் பாதுகாப்பு மற்றும் ஆற்றல் மாற்றம் போன்ற முக்கிய சுற்றுச்சூழல் கருப்பொருள்களை மையமாக கொண்டு, கோவை குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்த விழாவில் இருவரும் பங்கேற்றனர்.
இதில் பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிக்கும் பிரிவில், நுண்ணுயிரிகளை பயன்படுத்தி பிளாஸ்டிக்கை சிதைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பிளாஸ்டிக் பொருட்களாக மாற்றினர். கழிவு மேலாண்மை பிரிவில் இருவரின் தீர்வு அங்கீகரிக்கப்பட்டது.
இவர்களின் யோசனையை வளர்க்க உதவும் வகையில் ஸ்டார்ட்-அப் டி.என்.,ல்லில் இருந்து ஊக்கத்தொகை வழங்கப் பட்டது. கே.வி.ஐ.டி., அறக்கட்டளை, கல்லுாரி தாளாளர் தங்கவேல், முதல்வர் வாசுதேவன், துறை தலைவர் சரவணன் மற்றும் ஆசிரியர்கள், ஊக்கத்தொகை பெற்ற இருவைரயும் பாராட்டினர்.