/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்கூகுள் நிறுவனத்தை அணுகிய போலீசார்
/
பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்கூகுள் நிறுவனத்தை அணுகிய போலீசார்
பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்கூகுள் நிறுவனத்தை அணுகிய போலீசார்
பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்கூகுள் நிறுவனத்தை அணுகிய போலீசார்
ADDED : ஜன 23, 2025 01:29 AM
பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்கூகுள் நிறுவனத்தை அணுகிய போலீசார்
ஈரோடு,:ஈரோட்டில், மூன்று பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை அடையாளம் காண, கூகுள் நிறுவனத்தை போலீசார் அணுகியுள்ளனர்.
ஈரோடு திண்டல் அருகே தனியார் மெட்ரிக் பள்ளி,   தெற்கு பள்ளம் அருகே உள்ள ஒரு பள்ளி, வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி என ௩ பள்ளிகளுக்கு நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் மெயில் மூலம் வந்தது. மூன்று பள்ளிகளிலும் வெடிகுண்டு கண்டறிதல் பிரிவு போலீசார், மோப்ப நாய் பிரிவு, சட்டம் ஒழுங்கு போலீசார் தனித்தனியே தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். பள்ளிகளில் வெடிகுண்டு இல்லை. வதந்திதான் என்பதை சோதனைக்கு பின் இரவில் உறுதி செய்தனர். சோதனையை முடித்த பின் போலீசார் வெளியேறினர். வெடிகுண்டு மிரட்டல் மெயில் மூலம் தான் வந்துள்ளது. எனவே, கூகுள் நிறுவனத்திடம் மெயில் அனுப்பி நபரின் முகவரி, மொபைல் எண் அல்லது ஏதாவது ஒரு அடையாளத்தை தெரிவிக்க வேண்டும் என, கேட்டு கடிதம் அனுப்பி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.