/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அ.தி.மு.க., ஓட்டை கவர களமிறக்கப்பட்ட மாஜி அமைச்சர்
/
அ.தி.மு.க., ஓட்டை கவர களமிறக்கப்பட்ட மாஜி அமைச்சர்
அ.தி.மு.க., ஓட்டை கவர களமிறக்கப்பட்ட மாஜி அமைச்சர்
அ.தி.மு.க., ஓட்டை கவர களமிறக்கப்பட்ட மாஜி அமைச்சர்
ADDED : ஜன 29, 2025 01:25 AM
ஈரோடு,:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., ஓட்டுக்களை பெற முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் களமிறக்கி விட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை, அ.தி.மு.க., - பா.ஜ., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், இவர்களது ஓட்டுக்களை பெற, தி.மு.க., மற்றும் நா.த.க.,வினர், நேரடியாக, மறைமுகமாக களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: அமைச்சர் முத்துசாமி அ.தி.மு.க.,வில் இருந்து வந்ததால், பழக்கம், நண்பர்கள் அடிப்படையில் அ.தி.மு.க.,வில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள், பா.ஜ.,வில் சிட்டிங் எம்.எல்.ஏ., சரஸ்வதி என பலரும் முத்துசாமியுடன் நெருக்கமானவர்கள். எனவே அ.தி.மு.க., - பா.ஜ., ஓட்டுக்கள், தி.மு.க.,வுக்கு கிடைக்கும் வகையில், பல்வேறு வகையில் காய் நகர்த்தப்படுகிறது.
குறிப்பாக பெருந்துறையை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க., அமைச்சராகவும், புறநகர் மாவட்ட செயலாளராகவும் இருந்த தோப்பு வெங்கடாசலம், தற்போது தி.மு.க.,வில் உள்ளார். அவருக்கும் ஈரோட்டில் செல்வாக்கு உள்ளதால், முக்கிய எதிர்க்கட்சி நபர்களை சந்தித்து பேசுதல், அ.தி.மு.க., ஓட்டு அதிகம் உள்ள பகுதிகளில் பேச வைத்தல், தற்போது அ.தி.மு.க.,வில் உள்ள நிர்வாகிகள், அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் பட்டியலை வைத்து, அவர் மூலம் ஓட்டாக்கும் முயற்சியில் களம் இறக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க.,வுக்கு வந்த பின், தன்னிச்சையாக செயல்பட முடியாத நிலையில், வெங்கடாசலம் சோர்ந்து காணப்பட்டார். கடந்த டிச.,ல் ஈரோட்டுக்கு முதல்வர் வந்தபோது, வெங்கடாசலத்தை அழைத்து தனியாக பேசினார். இந்நிலையில் அமைச்சர் முத்துசாமி யோசனைப்படி அ.தி.மு.க., - பா.ஜ., ஓட்டுக்களை பெற்றுத்தரும் பணி அவர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2023 இடைத்தேர்தலில், 66,000 ஓட்டு வித்தியாசத்தில் இளங்கோவன் வென்றார். அப்போது அ.தி.மு.க., எதிர்த்து நின்றது. தற்போது அ.தி.மு.க., போட்டியில் இல்லாததால், அவர்களது ஓட்டு நா.த.க., அல்லது ஓட்டுப்பதிவே நடக்காத நிலை ஏற்படும்.
அவற்றில் கணிசமானதை பெற்றால், 66,000ஐ கடக்க முடியாவிட்டாலும், அதே நிலையை தக்க வைக்கலாம். அதற்காகத்தான் வெங்கடாசலம் போன்ற அ.தி.மு.க., முன்னாள் நிர்வாகிகள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கூறினர்.

