/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓராண்டாக துார்வாராத சாக்கடையால் இ.நெகமம் ஊராட்சியில் துர்நாற்றம்
/
ஓராண்டாக துார்வாராத சாக்கடையால் இ.நெகமம் ஊராட்சியில் துர்நாற்றம்
ஓராண்டாக துார்வாராத சாக்கடையால் இ.நெகமம் ஊராட்சியில் துர்நாற்றம்
ஓராண்டாக துார்வாராத சாக்கடையால் இ.நெகமம் ஊராட்சியில் துர்நாற்றம்
ADDED : ஜன 29, 2025 01:28 AM
ஓராண்டாக துார்வாராத சாக்கடையால் இ.நெகமம் ஊராட்சியில் துர்நாற்றம்
சத்தி, :சத்தியமங்கலம் யூனியன் இக்கரை நெகமம் ஊராட்சி நான்காவது வார்டு கொழிஞ்சானுாரில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் ஓராண்டுக்கும் மேலாக சாக்கடை துார் வாரப்படவில்லை. இதனால் கழிவு நீர் தேங்கி ஊருக்குள் திரும்பி வருகிறது.
இதனால் அனைத்து வீதிகளிலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. வலியுறுத்தி கேட்டபோது ஆட்கள் பற்றாக்குறையே காரணம் என்கின்றனர். இதனால் தொற்றுநோய் அபாயம் அதிகரித்துள்ளது.
மழை காலங்களில் கொசுத்தொல்லை அதிகரித்து, இரவில் துாங்க முடியவில்லை. சத்தி யூனியன் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.