/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாலத்து தடுப்பு கம்பியில் நள்ளிரவில் மோதிய லாரி
/
பாலத்து தடுப்பு கம்பியில் நள்ளிரவில் மோதிய லாரி
ADDED : ஜன 29, 2025 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலத்து தடுப்பு கம்பியில் நள்ளிரவில் மோதிய லாரி
ஈரோடு,:மதுரையிலிருந்து ஈரோடு வெட்டுக்காட்டு வலசு பகுதியில் உள்ள சேமியா தயாரிப்பு நிறுவனத்துக்கு மூலப்பொருட்களை ஏற்றிய லாரி புறப்பட்டது. நேற்று நள்ளிரவில் ஈரோடு கொல்லம்பாளையம் உயர்மட்ட ரயில்வே பாலம் வழியாக செல்லாமல், இலகுரக வாகனங்கள் மட்டுமே செல்லும் பழைய பாலத்தின் வழியில் டிரைவர் இயக்கியுள்ளார்.
அப்போது பாலத்துக்கு முன்பிருந்த தடுப்பு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. தடுப்பு கம்பமும் உடைந்து விழுந்தது. லேசான ரத்த காயத்துடன் டிரைவர் தப்பினார். நள்ளிரவு நேரம் என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை.

