/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிவன்மலை கோவில் தைப்பூச விழாதேரோட்டம் கோலாகல தொடக்கம்
/
சிவன்மலை கோவில் தைப்பூச விழாதேரோட்டம் கோலாகல தொடக்கம்
சிவன்மலை கோவில் தைப்பூச விழாதேரோட்டம் கோலாகல தொடக்கம்
சிவன்மலை கோவில் தைப்பூச விழாதேரோட்டம் கோலாகல தொடக்கம்
ADDED : பிப் 12, 2025 01:08 AM
சிவன்மலை கோவில் தைப்பூச விழாதேரோட்டம் கோலாகல தொடக்கம்
காங்கேயம்:காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், நடப்பாண்டு தைப்பூச தேர் திருவிழா நேற்று மாலை தொடங்கியது.
செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், திருப்பூர் கலெக்டர்  கிறிஸ்துராஜ், அயலக தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, உதவி ஆணையர் தனசேனர், திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், சிவன்மலை கோவில் உதவி ஆணையர் ரத்தினாம்பாள், திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் இல.பத்மநாபன், எஸ்.பி., யாதவ்கிரிஷ் அசோக்,
காங்கேயம் டி.எஸ்.பி., மாயவன், மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அரோகரா கோஷங்களுக்கு மத்தியில் கிரிவல பாதையில், 200 மீட்டர் துாரம் இழுக்கப்பட்டு நடுவீதியில், 4:50 மணிக்கு நிலை நிறுத்தப்பட்டது. இன்றும், நாளையும் கிரிவல பாதையை தேர் சுற்றி வந்து நிலைக்கு வரும்.  தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி, தீர்த்தக்குடம் எடுத்தும் பாத யாத்திரையாக வந்தனர்.
விழாவையொட்டி, 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.