/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாணவர்களின் கண்டுபிடிப்பு கண்காட்சி துவக்க விழா
/
மாணவர்களின் கண்டுபிடிப்பு கண்காட்சி துவக்க விழா
ADDED : பிப் 12, 2025 01:09 AM
மாணவர்களின் கண்டுபிடிப்பு கண்காட்சி துவக்க விழா
-----சென்னிமலை,:-சென்னிமலையில் தைப்பூச தேர்த் திருவிழாவை முன்னிட்டு பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்ற, கண்டுபிடிப்புகளின் கண்காட்சி ஆறு நாட் களுக்கு நடக்கிறது.
சென்னிமலை கொங்கு வேளாளர் அறக்கட்டளை, விடியல் பொதுநல இயக்கம், கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி உட்பட பலர் இணைந்து நடத்துகின்றனர். கண்காட்சி துவக்க விழா சென்னிமலை கிழக்கு ராஜவீதியில் நேற்று நடந்தது. சென்னிமலை கொங்கு வேளாளர் அறக்கட்டளை தலைவர் துரைசாமி தலைமை வகித்து பேசினார். செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கண்காட்சியை துவக்கி வைத்தார். மாணவர்களின் அறிவியல் செயல் மாதிரிகளை பார்வையிட்டு பாராட்டினார். விழாவில் தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் செல்வம், பிரபு, நகர செயலாளர் ராமசாமி, சென்னிமலை கொங்கு வேளாளர் அறக்கட்டளை செயலாளர் கந்தசாமி, பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி, சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், துணைத் தலைவர் சௌந்திரராஜன், விடியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் பங்கேற்றனர். கண்காட்சி, 16ம் தேதி வரை மாலை, 5:௦௦ மணி முதல் இரவு, 8:௦௦ மணி வரை நடக்கிறது.

