/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தெருநாய் தொல்லை விவகாரம்மாநகராட்சி நிர்வாகம் அறிவுரை
/
தெருநாய் தொல்லை விவகாரம்மாநகராட்சி நிர்வாகம் அறிவுரை
தெருநாய் தொல்லை விவகாரம்மாநகராட்சி நிர்வாகம் அறிவுரை
தெருநாய் தொல்லை விவகாரம்மாநகராட்சி நிர்வாகம் அறிவுரை
ADDED : பிப் 19, 2025 01:36 AM
தெருநாய் தொல்லை விவகாரம்மாநகராட்சி நிர்வாகம் அறிவுரை
ஈரோடு:ஈரோடு மாநகராட்சியில் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க, மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த மக்கள், இறைச்சி கடை உரிமையாளர்கள் ஒத்துழைப்பு அளிக்க, மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சியில் தெருநாய் தொல்லை குறித்த புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிராணிகள் வதை சட்டத்தில் நாய்களை முழுமையாக அகற்ற வழியில்லை. அதே நேரத்தில் இறைச்சி கடை உரிமையாளர், மக்கள் சாலையோரங்களில் இறைச்சி மற்றும் உணவு கழிவை கொட்டுவதை தவிர்த்து, முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.