/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பணி ஓய்வு பெற்றவரின் வீட்டில்நகை, குத்து விளக்கு திருட்டு
/
பணி ஓய்வு பெற்றவரின் வீட்டில்நகை, குத்து விளக்கு திருட்டு
பணி ஓய்வு பெற்றவரின் வீட்டில்நகை, குத்து விளக்கு திருட்டு
பணி ஓய்வு பெற்றவரின் வீட்டில்நகை, குத்து விளக்கு திருட்டு
ADDED : பிப் 20, 2025 01:47 AM
பணி ஓய்வு பெற்றவரின் வீட்டில்நகை, குத்து விளக்கு திருட்டு
கோபி:பணி ஓய்வு பெற்ற முதியவரின் வீட்டின் பூட்டை உடைத்து, நகை, வெள்ளிக்குத்து விளக்கு மற்றும் டம்ளர்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
கோபி, வெள்ளாளபாளையம் அருகேஎஸ்.பி., நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 60. இவர், கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த, 15ம் தேதி குடும்பத்துடன் தனது மகன் வீட்டுக்கு சென்றுவிட்டு, 17ம் தேதி வீடு திரும்பினார். அப்போது மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த தங்க மோதிரம், செயின், வளையல் என மூன்றரை பவுன் நகை, நான்கு வெள்ளி குத்து விளக்கு மற்றும் மூன்று டம்ளர்களை திருடி சென்றனர்.
கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.