/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஒருங்கிணைந்த சேவை மைய பணிக்கு விண்ணப்பிக்கலாம்
/
ஒருங்கிணைந்த சேவை மைய பணிக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : பிப் 21, 2025 12:49 AM
ஒருங்கிணைந்த சேவை மைய பணிக்கு விண்ணப்பிக்கலாம்
ஈரோடு, ;சமூக நலத்துறை மூலம் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய தகுதியான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. ஈரோடு மாவட்ட இணைய தள முகவரி, www.erode.nic.in ல் உரிய படிவம், பணியிடம், தகுதி குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்து 'மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், கலெக்டர் அலுவலகம், 6வது தளம், ஈரோடு - 638 011, போன்: 0424 2261405,' என்ற முகவரியில் வரும், 25ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வழக்கு பணியாளர் பதவிக்கு, 18,000 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். சமூக பணி சார்ந்த பட்டம், உளவியலில் பட்டம் பெற்றோர் விண்ணப்பிக்கலாம். பாதுகாவலர் பணிக்கு உள்ளூரில் வசிப்போர் விண்ணப்பிக்கலாம். மாதம், 12,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும். பல்நோக்கு உதவியாளர் பணிக்கு, 10,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும். இப்பணிக்கு எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

