/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேசிய ஒருங்கிணைப்பு குழு ஓய்வூதியர் வேறுபாடு களையக்கோரி ஆர்ப்பாட்டம்

ADDED : ஏப் 04, 2025 01:25 AM
தேசிய ஒருங்கிணைப்பு குழு ஓய்வூதியர் வேறுபாடு களையக்கோரி ஆர்ப்பாட்டம்
ஈரோடு:ஓய்வூதியர் தேசிய ஒருங்கிணைப்பு குழு சார்பில், ஈரோடு தலைமை தபால் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. குழு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் சின்னசாமி முன்னிலை வகித்தார். கோட்ட செயலர் ராமசாமி கோரிக்கை குறித்து பேசினார். லோக்சபாவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட நிதி மசோதாவில் சில திருத்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஊதியக்குழு பரிந்துரையில் இத்திருத்தங்களை அமலாக்கும்போது, ஓய்வூதியர்களிடையே ஓய்வு தேதி அடிப்படியில் பாரபட்ச ஓய்வூதியம் கிடைக்கும்.
மத்திய பணியாளர் ஓய்வூதிய திட்டம் எனப்படும் சி.சி.எஸ்., ஓய்வூதிய திட்டத்தில் பணி ஓய்வு பெறுபவர், 8வது ஊதியக்குழு பரிந்துரைகளின் பலன் கிடைக்குமா என கேள்வி எழுகிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு, ஓய்வூதியர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, 'ஓய்வூதிய விதிகளில் மாற்றம் இல்லை' என்றார். ஆனால் 'ஓய்வு பெற்றோருக்கு எவ்வித பாரபட்சமும் காட்டப்பட மாட்டாது' என அவர் உறுதிமொழி அளிக்கவில்லை. எனவே அம்முரண்பாட்டை நீக்க வேண்டும், என வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் கோட்ட செயலாளர் ராமசாமி, நிர்வாகிகள் பன்னீர்செல்வம், சின்னசாமி, பால மோகன்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.