/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு மார்க்கெட்டில் புதிய மஞ்சள்குவிண்டால் ரூ.15,500ஐ கடந்து விற்பனை
/
ஈரோடு மார்க்கெட்டில் புதிய மஞ்சள்குவிண்டால் ரூ.15,500ஐ கடந்து விற்பனை
ஈரோடு மார்க்கெட்டில் புதிய மஞ்சள்குவிண்டால் ரூ.15,500ஐ கடந்து விற்பனை
ஈரோடு மார்க்கெட்டில் புதிய மஞ்சள்குவிண்டால் ரூ.15,500ஐ கடந்து விற்பனை
ADDED : பிப் 20, 2025 02:00 AM
ஈரோடு மார்க்கெட்டில் புதிய மஞ்சள்குவிண்டால் ரூ.15,500ஐ கடந்து விற்பனை
ஈரோடு:ஈரோடு மார்க்கெட்டில், கடந்த இரு நாட்களாக புதிய மஞ்சள் குவிண்டால், 15,500 ரூபாயை கடந்து விற்பனையாகிறது.
வழக்கமாக ஜனவரி முதல் பிப்., 20க்குள், புதிய மஞ்சள் அறுவடை துவங்கி விற்பனைக்கு வரத்தாகும். தற்போது சேலம், தர்மபுரி, கர்நாடகாவில் புதிய மஞ்சள் அறுவடையாகி, ஈரோடு பகுதியில் உள்ள ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் ஈரோடு, கோபி சொசைட்டிகளுக்கு வரத்தாகிறது. கடந்த வாரம், 12,500 முதல், 14,500 ரூபாய்க்குள் விற்பனையான நிலையில் தற்போது, 15,500 ரூபாயை கடந்து விற்பனையாகிறது.
இது குறித்து, ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது:
சேலம், தர்மபுரி, கர்நாடகா மாநிலத்தில் புதிய மஞ்சள் ஓரளவு அறுவடை துவங்கி, ஈரோட்டுக்கு வரத்தாகிறது. ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர், பவானி தாலுகாவில் மட்டும், 8ம் நம்பர் மஞ்சள் அறுவடையாகி விற்பனைக்கு வருகிறது. கொடுமுடி உட்பட ஈரோடு தாலுகா பகுதியில், சில நாட்களுக்கு பின்னரே அறுவடை துவங்கி வரத்தாகும். ஈரோடு பகுதி விற்பனை கூடங்களில் பழைய மஞ்சள் குவிண்டால், 7,000 முதல், 10,000 ரூபாய்க்குள் விற்பனையாகிறது.
கடந்த வாரம் புதிய மஞ்சள் குவிண்டால், 1,000 முதல், 1,500 ரூபாய் உயர்ந்து, 12,500 ரூபாய் முதல், 14,500 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது தரமான மஞ்சள் வரத்தாவதால், மேலும் விலை உயர்ந்து குவிண்டால், 15,500 முதல் 15,800 ரூபாய் வரை விற்பனையாகிறது.
அதுபோல, நிஜாமாபாத் மார்க்கெட்டுக்கும் பெரிய அளவில் புதிய மஞ்சள் வரத்தாகவில்லை. மஹாராஷ்டிராவில் அதிகளவில் மஞ்சள் சாகுபடி செய்திருந்தாலும், ஒரு மாதத்துக்கு பின்னரே அறுவடை துவங்கும். தற்போது புதிய மஞ்சள் என்பதாலும், தேவை அதிகமாக உள்ளதாலும், வியாபாரிகள் ஆர்வமாக வாங்குகின்றனர். புதிய மஞ்சள் வரத்தாவதால், பழைய மஞ்சள் விலை குறைந்தே காணப்படுகிறது. புதிய மஞ்சள் அறுவடை முழு அளவில் நடந்து, வரத்தானால் தேவை அடிப்படையில் மேலும் விலை உயரும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு கூறினார்.
ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று புதிய ரக விரலி மஞ்சள் குவிண்டால், 12,358 - 15,199 ரூபாய், கிழங்கு, 11,555 - 14,399 ரூபாய், ஈரோடு சொசைட்டியில் விரலி, 13,311 - 15,569 ரூபாய், கிழங்கு, 12,775 - 14,869 ரூபாய் வரை விலை போனது.

