தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/புலி விரட்டியதால் தாயை பிரிந்த குட்டி யானை

புலி விரட்டியதால் தாயை பிரிந்த குட்டி யானை

புலி விரட்டியதால் தாயை பிரிந்த குட்டி யானை


ADDED : டிச 17, 2011 01:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 17, 2011 01:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு தண்ணீர் குடிக்க வந்த யானைக் கூட்டத்தை, புலி விரட்டியதாலேயே, தாயைப் பிரிந்த யானைக்குட்டி, அணை நீரில் சிக்கியுள்ளது தெரியவந்துள்ளது.ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையின் மறு பகுதியான பூதிக்குப்பை வனப்பகுதியின் நீர்த்தேக்க பகுதியில், டிச., 14ம் தேதி மாலை யானைக்குட்டி ஒன்று நீந்த முடியாமல் தத்தளித்தது.

நீண்ட நேரம் போராடிய குட்டி யானை, மீனுக்காக விரிக்கப்பட்டிருந்த வலையில் சிக்கிக் கொண்டது.மீனவர்கள் அளித்த தகவலின் பேரில், வனத்துறை அதிகாரிகள் பரிசலில் சென்று, குட்டி யானையை மீட்டனர். மண்டல வனப்பாதுகாவலர் அருண் தலைமையில், சத்தியமங்கலம் வன அலுவலர் சதீஷ், பவானிசாகர் ரேஞ்சர் சதாசிவம் ஆகியோர், சோர்ந்து கிடந்த குட்டி யானைக்கு, இளநீர், குளுக்கோஸ், லேக்டோஜென், பால் ஆகியவற்றை உணவாக கொடுத்தனர்.



குட்டியைத் தேடி, தாய் யானை வரும் என, நேற்று முன்தினம் மாலை வரை வனத்திலேயே காத்திருந்தனர்.இரவில் புலி மற்றும் சிறுத்தை நடமாட்டம் இருக்கும் என்பதால், நேற்று முன்தினம் இரவு பாதுகாப்பு கருதி, பவானிசாகர் வன அலுவலகத்துக்கு குட்டியை கொண்டு வந்தனர்.இரவு முழுவதும் தாய் யானையின் நடமாட்டம் குறித்து வனத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர். மீண்டும் நேற்று காலை குட்டி யானை பூதிக்குப்பை பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தாய் யானைக்காக வனத்துறையினர் காத்திருந்தனர்.ஆனால், நேற்று மாலை வரை தாய் யானை வராததால், குட்டி யானையை வனத்துக்குள் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது.மண்டல வனப்பாதுகாவலர் அருண் கூறியதாவது:பிறந்து ஏழு மாதமேயான இந்த ஆண் குட்டி யானையின் தலைப் பகுதியில் புலி தாக்கியதற்கான காயம் உள்ளது. புலியிடமிருந்து தப்பிக்க, பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்துக்குள் வெகுதூரம் நீந்திச் சென்ற குட்டி யானை, அங்கிருந்த மீனவர்களின் வலையில் சிக்கியிருக்கலாம்.தாய் யானையிடமிருந்து பத்து நாளுக்கு முன்னரே குட்டி பிரிந்திருக்கலாம். வனத்தில் இருந்து வெளியேறிய இக்குட்டி, தாயை அழைக்கும் விதத்தில் பிளிறவே இல்லை. தாயிடமிருந்தும் எவ்வித பிளிறலும் இல்லை. புலி தாக்கியதால் காயமடைந்த குட்டி யானைக்கு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குட்டி யானையை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us