ADDED : டிச 18, 2011 03:49 AM
ஈரோடு: ஈரோட்டில் இருந்து கேரளா செல்லும் காய்கறி போக்குவரத்து
ஸ்தம்பித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு செல்லும்
காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள், முல்லைப்பெரியாறு பிரச்னையால்
அனுப்ப முடியாமல் குடோன்களில் முடங்கி உள்ளன. நேதாஜி பெரிய மார்க்கெட்
காய்கறி ஏஜன்ட் முருகன் கூறியதாவது: சத்தி, அந்தியூர், கோபி, தாளவாடி,
பர்கூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து காலி ஃபிளவர், முருங்கை, தக்காளி,
பீன்ஸ், அவரை, வாழை, முள்ளங்கி, பச்சை பட்டாணி உள்ளிட்ட பல்வேறு
காய்கறிகள், வெளி மாநிலங்களுக்கு, லாரி, டெம்போ மூலம் அனுப்பப்படுகிறது.
தமிழக எல்லையில் முல்லை பெரியாறு அணை பிரச்னை சூடுபிடித்து வருவதால், கேரள
மாநிலத்துக்கு வாகனங்கள் செல்லவில்லை. ஈரோட்டில் இருந்து செல்லும்
காய்கறிகள் தேக்கம் அடைந்துள்ளன. விலையும் வெகுவாக குறைந்து
வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
