UPDATED : டிச 20, 2011 08:12 AM
ADDED : டிச 19, 2011 03:53 AM
ஈரோடு: ஈரோடு அருகே எழுமாத்தூர் குரங்கன்பள்ளத்தை சேர்ந்தவர்கள் ராமாயம்மாள் (58), பழனிச்சாமியின் மனைவி வள்ளியம்மாள் (55).
இவர்கள் தங்களது வீட்டுக்கு தேவையான காய்கறிகளை, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை எழுமாத்தூர் சந்தையில் வாங்குவது வழக்கம். நேற்றும் வாரச்சந்தையில் காய்கறிகளை வாங்க, முத்தூர் மெயின் ரோட்டில் நடந்து சென்றனர். அப்போது சிவகிரியில் இருந்து ஈரோடு நோக்கி வேகமாக பைக்கில் வந்த வாலிபர், இருவர் மீதும் பயங்கரமாக மோதினார். தூக்கி வீசப்பட்டு ராமாயம்மாள், வள்ளியம்மாள் ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் இறந்தனர். விபத்துக்கு காரணமான வாலிபரை, அப்பகுதி மக்கள் விரட்டி பிடித்து, உதைத்து போலீஸில் ஒப்படைத்தனர். மொடக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார். போலீஸ் விசாரணையில், பைக்கில் வந்த வாலிபர் ஈரோட்டை சேர்ந்த சிவராஜ் என்பது தெரியவந்தது.
