/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விநாயகர் சதுர்த்தி விழா போலீசார் ஆலோசனை
/
விநாயகர் சதுர்த்தி விழா போலீசார் ஆலோசனை
ADDED : ஆக 25, 2024 01:35 AM
விநாயகர் சதுர்த்தி விழா
போலீசார் ஆலோசனை
காங்கேயம், ஆக. 25-
செப்., ௭ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்து ஊர்வலமாக எடுத்து செல்வது வழக்கம். இந்நிலையில் காங்கேயத்தில் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. டி.எஸ்.பி., மாயவன் தலைமை வகித்து அறிவுரை வழங்கினர்.
சிலை வைப்பதற்கு முன் போலீசிடம், உரிய அனுமதி பெற வேண்டும். களிமண் மற்றும் காகித கூழால் தயாரிக்கப்பட்ட சிலைகளையே பயன்படுத்த வேண்டும். அனுமதிக்கப்பட்ட வழிகளில் மட்டுமே ஊர்வலம் செல்ல போலீசார் வலியுறுத்தினர். இன்ஸ் பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், போக்குவரத்து போலீசார், விஸ்வ இந்து பரிஷத், இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.