/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓய்வூதியர் கூட்டமைப்பு சார்பில் ஈரோட்டில் தர்ணா
/
ஓய்வூதியர் கூட்டமைப்பு சார்பில் ஈரோட்டில் தர்ணா
ADDED : டிச 04, 2024 01:29 AM
ஈரோடு, டிச. 4-
தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஈரோடு, தாலுகா அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் மணிபாரதி வரவேற்றார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். 70 வயது கடந்த ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் உரிய நேரத்தில் வழங்க அரசாணை வழங்க வேண்டும். எம்.எச்.ஐ.எஸ்., மருத்துவ காப்பீடு திட்டத்தில் நடைபெறும் இடர்பாடுகளை களைய வேண்டும்.
குடும்ப பாதுகாப்பு நிதி, 50,000 ரூபாயில் இருந்து, 1.50 லட்சம் ரூபாயாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.