sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தொடர் மழையால் நெல் அறுவடை பாதிப்பு

தொடர் மழையால் நெல் அறுவடை பாதிப்பு

தொடர் மழையால் நெல் அறுவடை பாதிப்பு


ADDED : டிச 14, 2024 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 14, 2024 01:25 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தொடர் மழையால் நெல் அறுவடை பாதிப்பு

ஈரோடு, டிச. 14-

காளிங்கராயன் பாசன வாய்க்காலை ஒட்டிய பகுதியில் அறுவடைக்கு தயாராகிய நிலையில், தொடர் மழையால் கதிர்கள் பாதித்துள்ளன.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர் மூலம், காளிங்கராயன் வாய்க்கால் பாசனப்பகுதியில், 15,450 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது. ஈரோடு, கொடுமுடி, மொடக்குறிச்சி தாலுகாவுக்கு உட்பட்ட இப்பாசன பகுதியில், நெல், கரும்பு, மக்காசோளம், மரவள்ளி கிழங்கு, மஞ்சள் போன்றவை அதிகம் பயிரிடுவர். தற்போது நெல் அறுவடை நடந்து வருகிறது. நான்கு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், இப்பகுதியில் அறுவடைப்பணி நிறுத்தப்பட்டுள்ளது.

அறுவடை செய்தாலும், உலர்த்த இயலாது என்பதாலும், வயலுக்குள் இயந்திரங்கள் இறங்க இயலாது என்பதாலும் அறுவடை நடக்கவில்லை.

இருப்பினும், முற்றிய நெல் மணிகள் பல மணி நேரமாக நனைந்து, பதறாக மாறும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வயலுக்குள் தண்ணீர் தேங்காமல் இருக்கும் பணியை தொடர்ந்துள்ளனர். ஆனால், வெயில் அடிக்காததால், தண்ணீர் வடிந்தாலும் ஈரப்பதமாகவே பல வயல்கள் காணப்படுகிறது. இன்னும் இரு நாட்களுக்கு மேல் மழை தொடர்ந்தால், பல நுாறு ஏக்கர் நெற்பயிர் முற்றிலும் பாதிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us