ADDED : ஜன 12, 2025 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரயிலில் அடிபட்டு பைனான்சியர் பலி
ஈரோடு,:ஈரோடு, சூரம்பட்டி, நேதாஜி வீதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார், 39; பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இவரின் மனைவி பிரேமா, இரு பெண் குழந்தைகள் உள்ளன. மனைவியை பிரிந்து வாழ்ந்த நிலையில் குடிப்பழக்கத்துக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில் ஈரோடு-தொட்டிபாளையம் இடையிலான தண்டவாளத்தில் உடல் சிதைந்து சுரேஷ்குமார் சடலமாக கிடந்தார். கவனக்குறைவாக ரயில் பாதையை கடந்தபோது ரயில் மோதி பலியானதாக, ஈரோடு ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.

