/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உழவர் உழைப்பாளர் கட்சிசார்பில் பொங்கல் விழா
/
உழவர் உழைப்பாளர் கட்சிசார்பில் பொங்கல் விழா
ADDED : ஜன 17, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உழவர் உழைப்பாளர் கட்சிசார்பில் பொங்கல் விழா
தாராபுரம்: தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் பொங்கல் விழா, தாராபுரத்தில் நேற்று நடந்தது. மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கட்சி தலைவர் செல்லமுத்து கொடியேற்றி வைத்து பேசினார். அமராவதி அணையில் இருந்து ஒரு சிறப்பு திட்டம் மூலம், உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், ஈஸ்வரன், ராஜரீகா உள்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.