/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
துணி மில் உரிமையாளர்மேலாளர் மீது வழக்கு
/
துணி மில் உரிமையாளர்மேலாளர் மீது வழக்கு
ADDED : ஜன 17, 2025 01:47 AM
துணி மில் உரிமையாளர்மேலாளர் மீது வழக்கு
ஈரோடு, ஜன.: ஈரோடு, சடையம்பாளையம், முத்துசாமி காலனியை சேர்ந்தவர் பிரபு, 32; வில்லரசம்பட்டி நெடுஞ்சாலை நகரில் ஸ்ரீவேதா மில்லில் மெக்கானிக்காக வேலை செய்கிறார். இங்கு ஸ்டீம் பாய்லர் மூலம் நீரை சூடாக்கி துணிகளை பிளீச்சிங் செய்யும் பணி நடக்கிறது. இந்த வேலைக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்குமாறு மேலாளர் சதீஷ், உரிமையாளர் வெள்ளியங்கிரியிடம் பிரபு கேட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த, 14ம் தேதி, ஸ்டீம் பாய்லரை திறக்கும் பணியில், ஒடிசா மாநில தொழிலாளர்கள் இருவர் ஈடுபட்டனர். அப்போது சுடுநீர் கொப்பளித்து மேலே வந்து மூவரின் கால்களிலும் கொட்டியது. இதில் காயமடைந்த மூவரும், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உரிய பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்காத உரிமையாளர் வெள்ளியங்கிரி, மேலாளர் சதீஷ் மீது நடவடிக்கை பிரபு, வீரப்பன்சத்திரம் போலீசில், பிரபு புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் இருவர் மீதும் இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.