/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாடு வாங்க வந்தவர்களிடம்ரூ.௪.௨௦ லட்சம் பறிமுதல்
/
மாடு வாங்க வந்தவர்களிடம்ரூ.௪.௨௦ லட்சம் பறிமுதல்
ADDED : ஜன 17, 2025 01:51 AM
மாடு வாங்க வந்தவர்களிடம்ரூ.௪.௨௦ லட்சம் பறிமுதல்
ஈரோடு,:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக, மூன்று பறக்கும் படை, மூன்று நிலை கண்காணிப்பு குழு அமைத்து, வாகன தணிக்கை நடக்கிறது. கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி அருகே தனபிரனேஷ் தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் இரவு, வாகன தணிக்கை செய்தனர். அப்போது காரில் கொண்டு வரப்பட்ட, 2.20 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். காரை ஓட்டி வந்த கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த மாட்டு வியாபாரி ரபீக், கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் மாடு வாங்க வந்தது தெரியவந்தது.
* ஈரோடு, குமலன்குட்டை பகுதியில் செல்வகணபதிதலைமையிலான பறக்கும்படையினர், காரில் வந்த
கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த முனீரிடம், 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இவரும் கருங்கல்பாளையம் மாட்டு சந்தையில் மாடு வாங்க வந்திருந்தார்.
* ஈரோடு, செங்கோடம்பள்ளத்தில் வினோத்குமார் தலைமையிலான பறக்கும் படையினர், பவானி, முகாசிபுதாரை சேர்ந்த கார் விற்பனை நிறுவன மேலாளர் ஹரிபிரகாஷ் என்பவரிடம், இரண்டு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். தேர்தல் நடத்தும் அதிகாரி மணீஷ் உத்தரவுப்படி, கருவூலத்தில் பணம் செலுத்தப்பட்டது.