/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாற்றுத்திறனாளி போல் நடித்துலாரியில் ஏறி டிரைவரிடம் வழிப்பறி
/
மாற்றுத்திறனாளி போல் நடித்துலாரியில் ஏறி டிரைவரிடம் வழிப்பறி
மாற்றுத்திறனாளி போல் நடித்துலாரியில் ஏறி டிரைவரிடம் வழிப்பறி
மாற்றுத்திறனாளி போல் நடித்துலாரியில் ஏறி டிரைவரிடம் வழிப்பறி
ADDED : ஜன 18, 2025 01:33 AM
பவானி, : ஈரோட்டை சேர்ந்தவர் சண்முகம், 50; தனியார் கூரியர் சர்வீஸ் லாரி டிரைவர். பெங்களூருவிலிருந்து கோவைக்கு பார்சல் ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் வந்தார்.
பவானி, லட்சுமிநகர் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை, ௩:௦௦ மணியளவில் வந்தபோது, மாற்றுத்திறனாளி போல் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் கை காட்டி லிப்ட் கேட்டுள்ளார். அவரை ஏற்ற லாரியை நிறுத்தியுள்ளார். அவர் ஏறியவுடன், அவருடன் மற்றொரு வாலிபரும் ஏறி, டிரைவரின் கழுத்தில் கத்தியை வைத்துள்ளார். சிறிது துாரம் லாரி சென்றபோது, இருட்டான இடத்தில் நிறுத்தி, டிரைவரை இறக்கி தாக்கியுள்ளனர். அவரிடம், ௬,௦௦௦ ரூபாயை பறித்து தப்பியுள்ளனர்.
மர்ம நபர்கள் தாக்கியதில் கை முறிவு ஏற்பட்ட சண்முகம், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அவர் புகாரின்படி சித்தோடு போலீசார், மூன்று தனிப்படை அமைத்து, மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.