/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காலிங்கராயன் சிலைக்கு அமைச்சர் மரியாதை
/
காலிங்கராயன் சிலைக்கு அமைச்சர் மரியாதை
ADDED : ஜன 19, 2025 01:45 AM
காலிங்கராயன் சிலைக்கு அமைச்சர் மரியாதை
பவானி, ஆண்டுதோறும் தை மாதம், 5ம் நாள், காலிங்கராயன் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினமான நேற்று, பவானி அருகேயுள்ள காலிங்கராயன் அணைக்கட்டு வளாகத்தில் உள்ள, காலிங்கராயனின் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
* காலிங்கராயன் உருவச்சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர் முத்துச்சாமியை, மேட்டுநாசவம்பாளையம் பஞ்சாயத்தை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சந்தித்தனர். அமைச்சரிடம், 1,200 பேர் கையொப்பமிட்ட கோரிக்கை மனுவை வழங்கினர். அதில், ஈரோடு மாநகராட்சியுடன் மேட்டுநாசுவம்பாளையம் பஞ்சாயத்தை இணைக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர், சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் பேசுவதாக கூறவே, மக்கள் அங்கிருந்து சென்றனர்.