/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சீரான குடிநீர் கேட்டு மறியல் முயற்சி
/
சீரான குடிநீர் கேட்டு மறியல் முயற்சி
ADDED : ஜன 22, 2025 01:29 AM
சீரான குடிநீர் கேட்டு மறியல் முயற்சி
பவானி:வெள்ளித்திருப்பூர் பஞ்சாயத்து மேற்கு வீதியில் வசிக்கும் மக்களுக்கு, 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் டேங்க், கிழக்கு வீதியில் உள்ள மக்களுக்கு, 10 ஆயிரம் லிட்டர் கொண்ட ஒரு டேங்கும் உள்ளது. மேற்கு வீதியில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால், சீரான குடிநீர் வினியோகிக்க பஞ்., நிர்வாகத்திடம் மக்கள் வலியுறுத்தினர். கிழக்கு வீதியிலும் குடிநீர் பிரச்னை இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பஞ்., நிர்வாகம் சார்பில், கிழக்கு வீதியில் குடிநீர் இணைப்பை தோண்டி பராமரிப்பு செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்,
இதைப்பார்த்த மேற்கு வீதி மக்கள், எங்கள் பகுதிக்குத்தான் குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது. இப்பகுதிக்கு முறையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, 30க்கும் மேற்பட்டோர், வெள்ளித்
திருப்பூர் விநாயகர் கோவில் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். வெள்ளித்திருப்பூர் போலீசார், அம்மாபேட்டை பி.டி.ஓ., மனோகரன், பேச்சுவார்த்தை நடத்தினர்.மேற்கு மற்றும் கிழக்கு வீதியில், சட்ட விரோதமாக மோட்டார் பொருத்தி தண்ணீர் திருட்டில் சிலர் ஈடுபடுகின்றனர், அதை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பின் இரண்டு வீதி மக்களுக்கும் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று, பி.டி.ஓ., தெரிவித்தார். இதை யடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.