sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பதட்டமான ஓட்டுச்சாவடி பாதுகாப்பு குறித்து ஆய்வு

பதட்டமான ஓட்டுச்சாவடி பாதுகாப்பு குறித்து ஆய்வு

பதட்டமான ஓட்டுச்சாவடி பாதுகாப்பு குறித்து ஆய்வு


ADDED : ஜன 23, 2025 01:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2025 01:20 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பதட்டமான ஓட்டுச்சாவடி பாதுகாப்பு குறித்து ஆய்வு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள பதட்டமான ஓட்டுச்சாவடிகளை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, எஸ்.பி., ஜவகர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில், 237 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அதில், ஓட்டுச்சாவடி எண்-3 - ராஜாஜிபுரம், சத்தி வீதி, மாநகராட்சி துவக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடி எண்:138, அக்ரஹார வீதியில் உள்ள மகாஜன உயர்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடி எண்:167, வளையக்கார வீதி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடி எண்: 164, 165, 168, 171, 172, 173 என, ஆறு ஓட்டுச்சாவடிகள் என, ஒன்பது ஓட்டுச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

இதில், பி.பெ.அக்ரஹாரம், ராஜாஜிபுரம், வளையக்கார வீதி, அக்ரஹார வீதி ஆகிய இடங்களில் உள்ள பதட்டமான ஓட்டுச்சாவடிகளை கலெக்டர் ராஜகோபால், எஸ்.பி., ஜவகர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த ஓட்டுச்சாவடிகளில் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். வெப் கேமராக்கள் பொருத்த யோசனை தெரிவித்தனர். அந்த வெப் கேமராக்கள், நேரலையில் தொடர்ந்து தேர்தல் பிரிவு அலுவலர்கள் கண்காணிக்கவும் திட்டமிட்டுள்ளனர். மேலும், மத்திய துணை ராணுவத்தினர் வருகை புரிந்துள்ளதால், அவர்களும் இந்த பதட்டமான ஓட்டுச்சாவடிகளில் நிறுத்தப்படுவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us